Map Graph

மண்முனைப் பாலம்

மண்முனைப் பாலம் என்பது, இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சாலைப் பாலம் ஆகும். இது மட்டக்களப்பு வாவியின் படுவான் கரையையும் எழுவான் கரையையும் இணைக்கும் வகையில் அந்த வாவிக்குக் குறுக்காக அமைந்துள்ளது. இந்தப் பாலமே மட்டக்களப்பின் கரையோரத்தைத் தலைநிலத்துடன் இணைத்த முதல் பாலமாகும். மட்டக்களப்பு நகரிலிருந்து படுவான் கரையில் உள்ள மட்டக்களப்பு, அம்பாறைப் பகுதிகளுக்குச் செல்வதற்கான 30 கிலோமீட்டர் தூரத்தைக் குறைப்பதற்கான ஒரு மாற்று வழியாக இது விளங்குகிறது. இந்தப் பாலத்தினூடாகக் கொக்கட்டிச்சோலைப்பகுதி மக்கள் இலகுவாகவும், மிக விரைவாகவும் மட்டக்களப்பு நகரத்துக்கு சென்றுவர வசதியேற்பட்டுள்ளது. முன்னர் சிறிய படகுகள் மூலம் கடல் நீரேரி ஊடாகவே போக்குவரத்து இடம்பெற்றது.

Read article